அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆர்ச்சர் சவாலாக காணப்படுவார்!

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில், அறிமுக வீரராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கவுள்ளார்.

அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர், அவுஸ்திரேலிய அணியின் அதிரடித்துடுப்பாட்ட வீரர் ஸ்டீபன் ஸ்மித்திற்கு சவால் விடுப்பார் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேர்ன் வோர்ண் தெரிவித்துள்ளார்.

அறிமுக பந்து வீச்சாளராக ஆர்ச்சர் களமிறங்குவது தொடர்பில் கருத்துவெளியிட்ட ஷேர்ன் வோர்ண், ‘ஸ்டீபன் சிமித் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். ஸ்மித் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடிப்பதை பார்க்க விரும்புகின்றேன்.

ஆனால் 2ஆவது டெஸ்டில் ஆர்ச்சர் – சிமித்திற்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வார் என நம்புகின்றேன்.

அவரது வருகை மிகுதி டெஸ்ட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஷேர்ன் வோர்ண் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!