மேட்டூர் அணைக்கு நாள் ஒன்றுக்கு 12 முதல் 15 வரையான டி.எம்.சி நீர் வரக்கூடும் என இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளமை தொடர்பில் தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், 1.25 இலட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தர்பமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் நீர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காவிரியில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளமையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து நீர் வரத்து அதிகளவில் உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மூலக்காடு, கோட்டையூர், காவிரிபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.(நி)