பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக விவகாரம் என்பதால் வெளித்தரப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று பசில் ராபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தீர்மானங்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய சம்மேளனத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணக்கமாக செயற்படும் பங்காளி கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன சார்பில் உத்தியோகப்பூரவ அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையாததால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே காரணத்திற்காகத்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இன்றைய சம்மேளனத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரீஸ், தொகுதி அமைப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!