பொல்கஹவெலவில் ஒருவர் சுட்டுக்கொலை!

குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் பணியாற்றிய 27 வயதான இளைஞன் உயிரிழந்து;ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் கொள்ளையிடுவதற்காக இரு இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பணத்தை கொள்ளையடிக்க முற்பட்பட்டவேளை, எரிபொருள் நிலைய ஊழியர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த கொள்ளையர்கள் ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!