முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சம்மளங்குளம் பகுதியில் விவசாயக்கிணற்றில் வீழ்ந்து யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்மளங்குளம் பகுதியில் நிலவும் கடும் வரட்சியான நிலமையில், யானை நீரந்தும் நோக்கில் கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, தற்போது பனம்பழக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், அதனை உண்பதற்காக யானைக்கூட்டங்கள் வருகை தருவதாகவும் எனவே யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.(நி)