முல்லைத்தீவில் விபத்து:ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கடலுணவு கூலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொக்குளாய் முகத்துவாரம் பகுதியை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி சென்றபோது வீதியைவிட்டு விலகி தொலைத் தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் கூலர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!