எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று சந்திக்கவுள்ளார்.
எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளைய கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்து இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஸ விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி)