ஆஷஸ் தொடரில் இருந்து மொயின் அலி வெளியேற்றம்!

போதிய ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத காரணத்தை முன்வைத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் மொயின் அணி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொயின் அலியின் இடத்திற்கு, இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜாக் லீச், அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஆஷஸ் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி லண்டன் லொர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!