கேரளாவை அச்சுறுத்தும் காலநிலை:42 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.

கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பகுதிகளில் வீதிகளுடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதிகமான சேதத்தை எதிர்கொண்டுள்ள வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 42க்கும் அதிகமானவர்கள் சிக்கியுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உள்மாவட்டங்களை இணைக்கும் பல முக்கிய வீதிகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 315 தற்காலிக முகாம்களில் சுமார் 25 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!