காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்!

நாட்டின் பல பகுதிகளில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்குமென அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனினும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் நிலவும் தொடர்ச்சியான காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!