யாழில் ஆயுத கும்பல் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றினுள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டின் கதவு, ஐன்னல் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை கோடாரியால் கொத்தி சேதப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அரச உத்தியோகத்தர்களான கணவனும் மனைவும் தமது வீட்டைப் பூட்டி விட்டு வீட்டிற்குள் இருந்தபோதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கில்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பலொன்று வீட்டின் மதிலைப் பாய்ந்த வீட்டிற்குள் சென்று வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு வீட்டின் முன்பக்க கதவையும் கொத்திவிட்டு மதில் பாய்ந்து தப்பியோடியுள்ளனர்.

இதன்போது, தாக்குதல் தாரிகள் தப்பியோடும்போது அருகிலுள்ள வீடொன்றில் பூட்டப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வீ கமாராவையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!