சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றிய கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
27 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச ஒலிம்பியாட் போட்டி தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது.
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து 08பேர் பங்குபற்றியிருந்தனர்.
இதில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரும், கிளிநொச்சியில் இருந்து இருவரும் என வடமாகாணத்திலிருந்து மூவர் பங்குபெற்றிருந்தனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமரன் தனது அணிசார்பில் வெண்கலப்பதக்கத்தையும், ஆனந் கிருசாந் தனது அணிசார்பில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கும், கிளிநொச்சி மாவட்டத்துக்கும் பெருமையைப் பெற்றுத்தந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கிருஸ்தோபர் கமல்ராஜ் தலைமையில் கிளிநொச்சி வலய கல்வி பணிமனையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், வலய கல்வி அலுவலக சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.(நி)