ஏற்றுமதியை நோக்கி நகர வேண்டும் : சஜித்

மக்கள் சரியான தீர்மானம் எடுத்து, வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியாவில் மாதிரிக் கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

241, 242, 243 ஆகிய மூன்று மாதிரிக் கிராமங்கள் இன்று வவுனியா மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீர், மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டதாக இந்த வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆகும் போது அனைவருக்கும் வீடு கிடைத்திருக்க வேண்டும்.

அதன் ஒரு கட்டமாக, இந்த வருடம் செப்ரெம்பர் மாதத்துடன் 2 ஆயிரத்து 500 வீடுகளும், அடுத்த கட்டமாக 2020 ஆம் ஆண்டு 5 ஆயிரம் வீட்டுத் திட்டங்களையும், நான்காம் கட்டமாக பத்தாயிரம் வீட்டு திட்டங்களையும் என மொத்தாக 20 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை, 2025 ஆம் ஆண்டு கட்டி முடித்து, இலங்கை தேசத்தில் வாழும் மக்களுக்கு பரிசளிப்பதே எனது நோக்கமாகும்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி ஏற்றுமதியில் தான் தங்கியுள்ளது. எனவே ஏற்றுமதியை நோக்கிய பொருளாதார அபிவிருத்தி நோக்கி நாம் செல்ல வேண்டும்.

1950 முதல் 1980 களிலே மலேசியா, சிங்கப்பூர், கொரியா, யப்பான் போனற நாடுகள், ஆசியாவின் பொருளாதார புலிகளாக இருந்தார்கள்.

அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதிகளை கொண்டு வந்து, தமது நாடுகளை அபிவிருத்தி செய்தார்கள்.
வெளிநாட்டு முதலீடுகளை செய்தார்கள்.

கிழக்காசியில் ஒரு முக்கியமான நாடாக, எமது நாடு இருக்க, பிற நாடுகள் பொருளாதார புலிகளாக எழுச்சி பெறுகின்றன.

எனவே உங்களுடைய வாக்குகளை, சரியான முறையில் சரியான தீர்மானம் எடுத்து, சஜித் பிரேமதாச ஆகிய எனக்கு வழங்க வேண்டும்.

ஏற்றுமதியை மையப்படுத்திய தொழில் பேட்டைகள், தொழிற்சாலைகளை அமைக்கும் போது தான் நாடு தானாக வளர்சியடையும். என குறிப்பிட்டார்.

வவுனியாவில், 3 மாதிரிக் கிராமங்கள், இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

செவட்ட செவன திட்டத்தின் கீழ், வவுனியா பிரதேச செயலக பிரிவில், காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில், பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்கள், மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இதன் போது, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.

ஒவ்வொரு வீடுகளும் 5 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், 52 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தோட்டச் செய்கைக்கான கடன்கள், வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!