மட்டு, வவுணதீவில், சட்டவிரேத மண் அகழ்வு : இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்ட வவுணதீவு பொலிஸாரால், சட்டவிரேதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் இன்று கைது செய்யப்பட்டுள்தாக, வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.

இச் சம்பவம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள புளியடிமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபர்களையும் உழவு இயந்திரத்தையும் தாம் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (சி)v

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!