வீ.ஆனந்தசங்கரி பகிரங்க அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று காணப்படும் தமிழ் மக்களின் கட்சிகளிலே பெரும்பாலான கட்சிகள், தவறான பாதையில் செல்லும் நேரத்தில், தவறு செய்யாத ஒரே கட்சி தமிழர் விடுதலை கூட்டணி.

தமிழ் மக்களுக்கும் கட்சிகளுக்கும் நான் விடுக்கும் செய்தி, நடந்ததை மறந்துதமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர
யார் வேண்டுமானாலும் எம்மோடு இணையலாம். நாம், அனைத்து தொகுதிகளிலும் போட்டி போடுவதாக முடிவெடுத்து விட்டோம்.

இங்கே அரசியல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு, மக்கள் யாரையும் நம்ப முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.

எமது மக்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள். இடம்பெயர்வுக்கு பின் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் வார்த்தையாக
தலைவர்களின் பேச்சுக்கள் அமையவில்லை.

அன்றைய அரசியல்வாதிகள் அடகு வைத்த நகைகளை பகிரங்கமாக மேடைகளில் வைத்து கொடுத்தார்கள்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன்பிறகு நகைகள் வழங்கப்படவில்லை. அந்த நகைக்கு என்ன ஆனது
என்றும் தெரியாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு கேட்கிறார்கள். எதை வெட்டிக் கிழித்து விட்டு இந்த சம்பள உயர்வை கேட்கிறார்கள். பசி பட்டினியோடு
வாழும் மக்களின்பசியை போக்காமல், உங்களுக்கு சம்பள உயர்வு கேட்பதற்கு, நீங்கள் அந்த பதவியை விட்டு போகலாம்.

நானும் எம்.பி வேலை பார்த்தவன்தான். அந்தக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்கள் சமூக சேவகர்களாக வந்தார்கள். இன்று உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்தை தேடி அலைகின்றனர்.

மட்டக்களப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் 3 கோடி
தந்தார் என்று.

ஒரு பாரளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தை விட்டு சென்றதனால், அது இருவருக்கு பங்காக வேண்டி இருந்தது.
பின் கூறுகிறார்கள் சம்மந்தன் கையெழுத்திட்டு அந்த பணம் இரு பங்கும் ஒருவர் எடுத்துச் சென்றதாக.
அப்படி என்றால் சம்மந்தனா பிரதமர்?
இது மட்டும் உண்மையாக இருந்தால். இதைப்போன்ற கேவலம் கெட்ட அரசாங்கம் இருக்க முடியாது.

இந்த விடயம் ஒரு தொலைக்காட்சியில் தான் வந்தது. துரதிஸ்டவசமாக எந்த பத்திரிகையிலும் வரவில்லை.
இதை ஒரு முறைப்பாடாக கூறிய அந்த எம்.பி, பாராளுமன்றத்தில் இருக்க தகுதி அற்றவர்.

அரசாங்கம் இன்று ஒரு வியாபார ஸ்தாபனமாக மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் காசுதான். முன்பு ஒரு
பாராளுமன்ற அமரவுக்கு சென்றால் 50 ரூபா. இப்போது 2500 ரூபா என்ற கருத்து உள்ளது. இது உண்மையாக இருந்தால், இந்த மக்களுக்கு இந்த பாராளுமன்றம் செய்யும் மிகப்பெரிய கொடுமையாகும். என தெரிவித்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!