சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுதல் பலத்த காற்று வீசுகிறது.
இதனால் பல பிரதேசங்களில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
இதையடுத்து மின்சார விநியோகம் அடிக்கடி தடைப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத் தெரிவிக்கையில், பல பகுதிகளில் கடுங்காற்று வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் ஏறாவூர் நகர பிரதேசத்தில் ஆலயடி வீதியிலுள்ள வீடு ஒன்றும் வர்த்தக நிலையமொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இவ்வர்த்தக நிலையத்தின் தகட்டுக்கூரை முழுமையாகக் கழன்று அருகிலுள்ள வீட்டில் விழுந்துள்ளது. இதனால் வீடு மற்றும் மதில் சுவருக்கும் சேதமேற்பட்டுள்ளது. (007)