ஆலையடிவேம்பில் வெள்ளப்பெருக்கினை கட்டுப்படுத்த 6 கோடி ரூபா நிதி

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.


கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை திருத்தம் செய்து பூர்த்தி செய்வதன் பொருட்டு 477 பயனாளிகளுக்கான காசேலை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசேலைகளை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் செயலாளர் ரி.சுரேன் மற்றும் இணைப்பாளர் ம.காளிதாசன் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தார் ஆ.சசீந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 477 குறை வீட்டுப்பயனாளிகளுக்கான காசேலைகளையும் பிரதம அதிதி உள்ளிட்டவர்கள் வழங்கி வைத்தனர். (சி)

Recommended For You

About the Author: Suhirthakumar

error: Content is protected !!