சமூக விஞ்ஞான தேசிய போட்டியில், பொத்துவில் பாடசாலை மாணவி முதலாம் இடம்

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவி கா.லதுக்ஷிக் சலோனியா, தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று வரலாற்று ரீதியான சாதனை ஒன்றினை தனது பாடசாலைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.


இத் தேசிய சமூக விஞ்ஞான போட்டியானது, கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்டது.

போட்டியின் முடிவுகள் கடந்த வாரம் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு கிடைக்கப் பெற்றிருந்ததுடன், வெற்றி பெற்ற மாணவிக்கான தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், இன்று திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் மாணவி கா.லதுக்ஷிக் சலோனியாவிற்கு தங்கப் பதக்கத்தினை அணிவித்து பாராட்டி கௌரவித்து, சான்றிதழ்களையும் வைபவ ரீதியாக வழங்கி வைத்திருந்தார்.

குறித்த மாணவி பாடசாலையில் பல்வேறு போட்டிகளிலும் பல சாதனைகளை செய்துள்ளதுடன் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் 183 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அலுவலக அதிகாரிகள், பெற்றோர்கள் எனபலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!