ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் சஜித் பிரேமதாச எனவும், வெற்றி அடைக்கூடிய வேட்பாளரை கட்சி அறிவிக்கும் எனவும், நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தினை திறந்து வைப்பதற்கு, இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சரிடம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், எமது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
நாம் நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
வெற்றியை உறுதி செய்யக் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கட்சி அறிவிக்கும். உண்மையிலேயே எமக்கு வேறு வேறு விருப்பங்கள் இருக்கின்றன.
நான் நினைக்கின்றேன் சஜித் பிரேமதான் எங்கள் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் ஆனபோதும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடி, பெரும்பான்மையானோர் விரும்பும் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார். (சி)