மட்டு, மண்முனை வடக்கில், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறி!

சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார உள் வலய அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகத்தின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரணையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஏழு நாட்கள் கொண்ட வாண்மை விருத்தி சேவைக்கால பயிற்சி நெறி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறுகின்றது.


மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் வழிகாட்டலில் மண்முனை வடக்கு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மேகராஜ் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களில் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏழு நாட்கள் கொண்ட 56 மணித்தியாலங்கள் வாண்மை விருத்தி சேவைக்கால ஆலோசனை பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

இந்த பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக பிரதேச செயலக பிரிவுகளில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஏழு நாட்கள் கொண்ட பயிற்சி செயலமர்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!