வவுனியாயில், மணல் மேடு இடிந்து விழுந்தது : இருவர் படு காயம்

வவுனியா பாவற்குளத்தில், மணல் அகழ்வின் போது மணல் மேடு இடிந்து விழுந்ததில், இருவர் ஆபத்தான நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாவற்குளம் பகுதியில், சிலர் ஆற்றில் மணல் அகழ்ந்து கொண்டிருந்த போது, மணல் மேடு இடிந்து விழுந்ததில், அதில் இருவர் அகப்பட்டுள்ளனர்.

அதனை அங்கு நின்றவர்கள் அவதானித்த நிலையில், உடனடியாக மண்ணை வாரி எடுத்து, இருவரையும் மீட்டனர்.
இருப்பினும் இருவரும் மண்ணில் அகப்பட்டதனால் ஆபத்தான நிலையில் இருந்தனர்.

இதனையடுத்து, இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவரின் முள்ளந்தண்டு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், மற்றையவர் குணமடைந்து வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தில், பாவற்குளம் படிவம் இரண்டைச் சேர்ந்த 45 வயதுடைய மீரா முகைதீன் மாக்கின், சூடுவெந்தபுலவைச் சேர்ந்த 28 வயதுடைய ஏ.ஜே.முஸித் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!