வவுனியாவில், அறநெறி பாடசாலை திறப்பு விழா!

வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை, இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்பட்டது.


தரணிக்குளம் மக்களின் நீண்ட கால தேவையாக அறநெறி பாடசாலை காணப்பட்டு வந்தது. இதனை கருத்திற்கொண்டு வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சின் 04 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராஜா, உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!