யாழ், வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் திறந்துவைப்பு!வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை திறந்து வைத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகம் இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. (சி)