ஊறணி மக்களின் நிலமீட்பு போராட்டம் 360வது நாளை எட்டியது

அம்பாறை பொத்துவில் ஊறணி 60கட்டை கிராம மக்களின் நிலமீட்பு போராட்டம் 360வது நாளை எட்டிய நிலையிலும் தீர்வுகள் இன்றி மக்கள் வீதியோர போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமக்கு விரைவாக தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து கனகர்கிராமம் ஸ்ரீ செல்லப்பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு இருந்தனர்.

இவ் நிலமீட்பு போராட்டமானது கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி புஞ்சுமாத்தையா றங்கத்தனாவின் தலைமையில் பொத்துவில் ஊறணி 60ஆம் கட்டை கனகர்கிராம்ம மக்கள் வீதியோரமாக தற்காலிகக் கொட்டகை அமைத்து நில மீட்பு போராட்டத்தினை ஆரம்பம்பித்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை(09) திகதியுடன் நிலமீட்பு போராட்டத்தின் 360வது நாள் நிறைவடைந்து தொடர்ந்தும் நில மீட்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் அனுபவித்த அகதி வாழ்கை போதும் எமக்கான நல்லதொரு முடிவை வழங்க வேண்டும்.

எல்லோரும் வருகின்றார்கள்,போகின்றார்கள் எமது போராட்டம் 360வது நாட்களை எட்டியுள்ள நிலையில் உறுதியான முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 10ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் எமது நிலங்களில் மீண்டும் நாம் குடியேறி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சந்தர்பத்தினை அரசு இன்னும் வழங்காது இழுத்தடிப்பு செய்வது எமக்கு மனவேதனையை கொடுப்பதாக பொத்துவில் ஊறணி 60கட்டை காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் எமது காணிகளுக்குள் செல்வதற்கான உறுதியான தீர்வு அரசிடமிருந்து கிடைக்கப்பெறாத நிலையில் நிலமீட்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்து இருந்தர்.

இதேவேளை இன்று நிலமீட்பு வீதி போராட்டம் தொடங்கி 360வது நாளான இன்று வெள்ளிக்கிழமை 60ம் கட்டை உறணி ஸ்ரீ செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மிகவிரைவில் எமது மண்ணில் குடியேரி காணிகளில் பயிர்களை செய்து வாழ்வாதாரத்தில் மேம்படுவதுடன் எமது குழந்தைகளில் வாழ்வும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் இதற்கான வாய்ப்புக்களை எமக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!