துருக்கியில் வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு!

சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள துருக்கியின் ஹடே மாகாணத்தில் வெடிமருந்து கிடங்கில் இன்று அதிகாலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை வெடிப்புப் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, வெடிமருந்து கிடங்கிற்கு அருகில் உள்ள வீடுகள், கட்டடங்களில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ஹடே மாகாணத்தில் அவசர மீட்புக் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!