ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கார்லிபேக் பகுதியில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து லிந்துளை பகுதிக்கு கஜூ விதைகள் ஏற்றிச்சென்ற பார ஊர்தி ஒன்று, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ரதாலை சோட்கட் நானுஒயா கார்லிபேக் பகுதியில் விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக நானு ஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பார ஊர்தியின் தடையாளி (பிறேக்) முறையாக இயங்காமையினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)