மாதர் கிராம அபிவிருத்திச்சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன தலைமையில் இடம்பெற்றது.

20 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவுள்ள நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞ்ஞானமும், சிறப்பு விருந்தினராக ஐனநாயக போராளிகள் கட்சி தலைவர் ச.வேந்தனும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் மாதர்கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாகத்தினர், கிராமமட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!