உத்தியோகத்தர்கள் கள விஜயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் நடவடிக்கைகளை பார்வையிடும் பொருட்டு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேற்று காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாறக் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் எம்.பி.முபாறக் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்களாக 100 உத்தியோகத்தர்கள் இந்த கள விஜயத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.சில்மியா உட்பட காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இவர்களை வரவேற்று காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாட்டினை விளக்கி கூறியதுடன் காத்தான்குடி பிரதேச செயலக நடவடிக்கைகளையும் காண்பித்தனர்.

இதையடுத்து காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒன்று கூடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதில் இரண்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதுடன் உற்பத்தி திறன் செயற்பாடு தொடர்பாகவும் பகிர்ந்து கொண்டனர்.

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் கடந்த ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாவது இடத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!