ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் முடிவை, மக்கள் எதிர்பார்க்கின்றனர் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரைத்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க…
ஒவ்வொரு கட்சிக்கும் தத்தமது வேட்பாளர் குறித்து அறிவிக்கும் உரிமை இருக்கிறது.
அதற்கிணங்கவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையும், பொதுஜன பெரமுன கோதாபய ராஜபக்ஷவையும் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றன.
எனினும் சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர், இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று, ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டாலும், ஜனாதிபதி யார் என்று தீர்மானிக்கும் பொறுப்பு சுதந்திர கட்சியிடமே இருக்கிறது.
காரணம், சுதந்திர கட்சியின் முடிவு என்ன என்பதையே, அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் தீர்க்கமான முடிவை வேண்டிய பொறுப்பில் நாம் இருக்கின்றோம். என தெரிவித்தார். (சி)