கட்சி நகர்வுகள் எதிர்வரும் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் : அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள், எதிர்வரும் 3 ஆம் திகதி, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள், தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள், எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.

செப்டெம்பர் 2 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சுதந்திர கட்சியின் மாநாடு 3 ஆம் திகதி நடத்தப்படும்.

சுகததாச உள்ளக அரங்கில், கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இந்த மாநாடு நடைபெறும்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்வார்கள்.

மாநாடு நிறைவடைந்த பின்னர், கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

மாவட்ட கூட்டங்கள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலும், தொகுதி கூட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் தலைமையிலும் இடம்பெறும். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!