வவுனியாவில், அனுமதியற்ற விளம்பர பதாதைகள் அகற்றல்!

வவுனியா கோவிற்குளம் பகுதியில், வீதிகளில் காணப்பட்ட அனுமதியற்ற விளம்பர பாதாதைகளை அகற்றும் பணியை, வவுனியா நகர சபையினர் இன்று முன்னெடுத்தனர்.


கோவிற்குளம் – சிதம்பரபுரம் பிரதான வீதியில் காணப்படும் பெரும்பாலான மின் கம்பங்களில், விளம்பர பாதாதைகள் காணப்பட்டது.

இதன் காரணமாக, அப்பகுதியின் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதுடன், கோவிற்குளம் வீதியின் அனைத்து மின் கம்பங்களிலும் விளம்பர பாதைகள் காணப்பட்டன.

இதனை அகற்றும் பணியில், நகர சபையினர் ஈடுபட்டனர்.

பதாதைகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, கோவிற்குளம் பகுதியில் காணப்படும் மின் கம்பங்கள் அனைத்தும், வெறுமையாக காணப்படுவதாக, எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!