கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு, மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த வாகனம், மாங்குளத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளனாதில், சாரதி படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஏ9 வீதியின் 233 ஆவது கிலோ மீட்டருக்கும் 234 ஆவது கிலோ மீட்டருக்கும் இடைப்பட்ட கிழவன்குளம் பகுதியில், இன்று காலை 11.00 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், சாரதி படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த கூலர் வாகனத்தின் முன் சக்கரம் காற்றுப்போனதன் காரணமாக, வீதியை விட்டு விலகி தடம் புரண்டு, சுமார் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு விபத்து நேர்ந்துள்ளது.
இதன் போது, சாரதி படுகாயமடைந்த நிலையில், 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டனர். (சி)