கிளிநொச்சி கல்லாற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு : ஒருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கல்லாறு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களாலும் பொது மக்களாலும் பொலிசாருக்கு பல தடவை தகவல்கள் அறிவிக்கப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பகல் பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் கிராம அலுவலர் மத்திய சுறறாடல் அதிகார சபை அதிகாரிகள் கல்லாறுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சட்டரீதியற்ற முறையில் அங்கீகரிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் மிக மோசமாக பாதிப்படையக் கூடிய நிலை காணப்படுகின்றது எனவும் இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் 18 ஆம் திகதிஇ கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!