மன்னார் மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜேசப்வாஸ் நகர் இளைஞர்களுடன், சிறிது நேரம் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டார்.
இரண்டு மாதிரிக் கிராமங்களை திறந்து வைக்கும் நிகழ்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து, இராயப்பு ஜேசேப் ஆண்டகை விளையாட்டு மைதானத்தில், இளைஞர்களுடன் உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்ராஸ், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதிகாரிகள், கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)