நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தி ல், இன்று காலை 8.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால், வீடு சேதமடைந்துள்ளதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் தீ காரணமாக, வீட்டின் 3 அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், தளபாடங்கள், உடைகள் உட்பட அத்தியவசிய ஆவணங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் முற்றாக நாசமாகியுள்ளன.
தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும், மின்சார ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டில் தீ ஏற்படும் போது இருவர் இருந்துள்ளனர். எனினும் அவர்களின் தெய்வதினமாக உயிர் தப்பியுள்ளனர்.
தீ காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும், அயலவர்களின் வீட்டில் த”ங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)