அம்பாறை கல்முனையில், போதை ஒழிப்பு வீதி நாடகம்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், போதை ஒழிப்பு வீதி நாடகம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து போதை ஒழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களில் நடத்தி வருகின்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் போதை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இரண்டாம் கட்டமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

இதற்காகன ஏற்பாடுகளை கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன் மேற்கொண்டிருந்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலளார் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

போதை அரக்கனை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில், வேம்படித்தோட்டம் வாணி வித்தியாலய மாணவர்களினால் பிரதேச செயலமுன்றலில் வீதி நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கல்முனை குருந்தையடி சுனாமி தொடர் மாடி வீடமைப்புத் திட்டம், பெரிய நீலாவணை சுனாமி தொடர் மாடி வீடமைப்புத் திட்டம் ஆகிய இடங்களலிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை போதைப்பொருள் பாவனையற்ற பிரதேசமாக கட்டியெழுப்புவதற்க்கு அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!