மகிந்தவை காப்பாற்றியது ஐ.தே.க : தயா கமகே

மின்சார கதிரையில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றி, அமெரிக்கா, எமது நாட்டிற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களையும் இல்லாமல் செய்து, 7ஜி மாநாட்டில், எமது நாட்டின் அரச தலைவருக்கு அழைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் நாமே என, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று, கொழும்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் நடாத்திய கலந்துரையாடலில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மூன்று அரை அல்லது நான்கு இலட்சம் பேரை வைத்துக்கொண்டு நடாத்தக் கூடிய அரச சேவையில், இன்று 16 இலட்சம் பேர் இருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ச அலுவலகங்களை பெரிதாக்கி, அதனுள் மேசை கதிரையை போட்டு, அதில் புதிதாக அரச உத்தியோத்தர்களை இணைத்துக் கொண்டார்.

அதன் பிரதிபலனாகத்தான், இரண்டு வருடங்கள் ஜனாதிபதிக்கான பதவிக்காலம் இருக்கும் போதே, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு எழுந்தது. இதற்காக தொடர்ந்தும் அவர் கடன் பெற்றார். அந்த கடன்களை குறுகிய காலத்திலே பெற்றுக்கொண்டார்.

இந்த கடன்களை, எமது கிராமங்களில் இருக்கும் கஸ்டப்பட்ட மக்கள், வங்கிகளில் சேர்த்து வைத்திருந்த பணத்தினை அடகு வைத்து பெற்றுக் கொண்டார். நூற்றுக்கு 9 அரை வீதம் என்ற டொலர் வீதத்தில் கடனை பெற்றுக்கொண்டார்.

ஆனால் அந்த நேரத்தில் என்னைப் போன்ற சிறிய நிறுவனங்கள், நூற்றுக்கு 4 அல்லது 5 டொலர் வீதத்தில் கடனை பெற்றுக் கொண்டோம்.

எமது தனியார் நிறுவனங்கள், நூற்றுக்கு ஐந்து டொலர் வீதத்தில் கடனை பெறும்போது, வங்கியை அடகு வைத்து நூற்றுக்கு 9 டொலர் வீதத்தில் மகிந்த அரசாங்கம் கடன் பெற்றுக் கொண்டமையானது, நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எமது நாடு அடிமட்டத்திற்கு சென்று, உலக நாடுகள் எமது நாட்டைப் பற்றி கணக்கெடுக்காது இருந்தன.

ஆனால் மகிந்தவும் மைத்ரியும் இணைந்து, என்னை மின்சார கதிரையில் அமர வைக்கப் போகின்றார்கள் என்று போலி பிரச்சாரம் செய்தார் மகிந்த ராஜபக்ச.

அவரையும் காப்பாற்றிக் கொண்டு, அமெரிக்கா எமக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களையும் இல்லாமல் செய்தவர்கள் நாங்கள். உலக நாடுகள் அனைத்தும் எமது நாட்டை வரவேற்றன.

உலகத்தின் பிரபலமான ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் எமது நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு கிடைத்தமை, எமது நாட்டிற்கு பெருமை சேர்த்தது. அவ்வாறான நிலமை எம்மால் ஏற்பட்டது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!