வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்க வேண்டும் : சிவஞானம்

வெளிவாரிப் பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள், இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினர்.

பட்டதாரி நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில், அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவில்லை என, பட்டதாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் நாடளாவிய ரீதியில் வழங்கபட்ட பட்டதாரி நியமனங்களில், உள்வாரி பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் வெளிவாரி மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள், நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடி இன்றி, அனைத்து பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள் அனைவருக்கும், நியமனங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பான தொடர் நடவடிக்கைகளை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.

என தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!