கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்த சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
விஜேராம இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச,
குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் அனைத்து விசாரணை குழுக்கள் மீதும் எவ்வித நம்பிக்கையையும் வைக்க முடியாது.
விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
விசாரணைகள் தொடர்பில் தாம் தொடர்ந்து அதிருப்தியடைவதாக மதத் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவது கவனத்திற்குரியது. எனக் குறிப்பிட்டார். (சி)