அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இரு வீடுகளை உடைத்து திருட்டு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மற்றும் தம்பிலுவில் பகுதிகளில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெருமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதுடன், இன்று பொலிசார் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ததோடு நகைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களையும் பொலிசார் தேடி வருவதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


நேற்று இரவு தம்பிலுவில் கிராம வீதியில் அமைந்துள்ள ஆசிரியையின் வீடு ஒன்றில் சுமார் 2.00 மணியளவில் வீட்டின் கிழக்கு பக்கமாக இருந்த ஜன்னனில் கிறிலை மெதுவாக உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அலுமாரியில் இருந்து தாலி, மாலை, காப்பு மோதிரங்கள் உட்பட சுமார் 30 இலட்சம் பெருமதியுடை 25 பவுண் நகைகள் கொள்ளையிட்டுகள்வர்கள் தம்பிச் சென்று இருந்ததுடன் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த போதும் தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது இருந்ததாகவும் வீட்டார் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் சம்பவ வீட்டுக்குச் சென்ற பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நகைகளும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்து இருந்தனர்.

இதேவேளை கடந்த வாரம் 30ம் திகதி விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்து எட்டு பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் அதுதொடர்பாக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று சந்தேக நபர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விநாயகபுரம் பாடசாலை வீதியில் நகைகள் கொள்ளையிடப்பட்ட நிலையில் 52 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டு இருந்ததையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  (சி)

 

 

 

 

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!