வவுனியாவில் விபத்து:மூவர் காயம்!

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளும், அப்பாதையூடாக எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 40 வயதுடைய பெண்ணும், அவரது 14 வயதுடைய பிள்ளை மற்றும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞனும் காயமடைந்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!