காலநிலை சீர்கேடு: ஹட்டனில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன!

நுவரெலியா ஹட்டன் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி கினிகத்தேனை பிட்டவல பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தால் குறித்த வீதியினூடான போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் சரிந்து வீழந்ததால் மின் கம்பம் வீழ்ந்ததுடன், மின் கம்பியும் அறுந்துள்ளது.

இதனால் அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது மரத்தை வெட்டி அகற்றியுள்ள மின்சார சபையினர், மின் வழங்கலை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் பிரதான வீதியில் சரிந்துள்ளதால், தற்போது அவ்வழியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!