யாழ்ப்பாணம் உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும், டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில், பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பள்சர் ரக மோட்டார் சைக்கிள் மோதி நிலைகுலைந்து, டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை அடுத்து பள்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.(நி)