கை அகற்றப்பட்ட விவகாரம்: உடன் விசாரணைக்கு உத்தரவு!

புத்தளம் – மாரவில வைத்தியசாலையில் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றிய சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசேட குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்கு செல்லவுள்ளது.

மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான பெண்ணொருவர் கர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சைக்காக கடந்த 20ஆம் திகதி மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இரு நாட்களின் பின்னர் சத்தரசிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வைத்தியர்கள் அவரது கையை வெட்டி அகற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக மாரவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் நிர்மலா லோகநாதன் தெரிவிக்கையில், அவர் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதை அடுத்து, அவர் விசேட சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண்ணின் ஒரு கை பலவீனமடைந்ததை வைத்தியர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அத்துடன் கையின் நிறம் மாறி வருவதை வைத்தியர்கள் அடையாளங்கண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி பாதிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். குறித்த நோயாளியின் உயிரை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!