இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ருமேஸ் ரத்நாயக்க பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமையை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த சம்மி சில்வா, எமது தலைமையில் கிரிக்கெட் சபை அமைக்கப்படும்போது,உலக கிண்ண போட்டிகளிற்கு இரண்டு மாதங்களே இருந்தன.
இதனால் எமக்கு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என தோன்றிய போதும் உலக கிண்ணம் நெருங்கியதால் அதே பயிற்சிவிப்பாளருடன் செல்வோம் என முடிவு செய்தோம்.
ஆனால் தற்போது குறித்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
இதனடிப்படையிலேயே ருமேஸ் ரத்நாயக்க இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டார்.(நி)