ஜனாதிபதி தலைமையில் இலங்கை-கம்போடியா வர்த்தக மாநாடு!

கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

புனோம் பென் நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கம்போடிய பிரதமரும் கலந்துகொண்டார்.

இதன்போது இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கம்போடிய பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றியதுடன், இலங்கை சார்பாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

கம்போடிய வர்த்தக குழுவின் தலைவர் மற்றும் இலங்கை கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் சாரங்க
விஜேரத்ன உள்ளிட்ட இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் பலர் குறித்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!