யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில், சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கடைகள் தீ விபத்து காரணமாக தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தீ விபத்தானது நேற்றிரவு 9 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,தீ விபத்தில் பழக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும், அருகில் இருந்த வெல்டிங் கராஜ் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிபத்து தொடர்பில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர்க்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இதேவேளை குறித்த தீ விபத்தானது இனந்தெரியாத நபர்களினால் ஏற்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் சாவகச்சேரிபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)