வவுனியாவில் கடும் காற்று:06 வீடுகள் சேதம்!

வவுனியாவில் நேற்று திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 06 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென கடும் காற்று வீசியது.

இதனால் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஒரு வீடு, பெரிய புளியாளங்குளத்தில் ஒரு வீடு, முதலியார் குளத்தில் இரு வீடுகள், வவுனியா வடக்கு மன்னகுளத்தில் ஒரு வீடு, நெடுங்கேணி வடக்கில் ஒரு வீடு என 6 வீடுகளும், 18 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

குறித்த வீடுகளின் கூரைப்பகுதிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், ஏ9 வீதி தேக்கவத்தையில் மரம் முறிந்து வீழ்ந்து கார் ஓன்று சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!