யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலைய, புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, ஏழாலை சிவகுரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவலுக்கு அமைய, சிவகுரு பகுதியில் உள்ள வீடு பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது, 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், 65 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, கசிப்பு உற்பத்தி செய்வதற்கு உரிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.(நி)