அம்பாறை பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஸ்ரீ அரசடியம்பாள் ஆலயத்தில், சமய குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை தினம், இன்று நடைபெற்றது.
இங்கு கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதும் குழுவினரால் சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்கள் பாராயணம் செய்யப்ட்டது. அத்துடன் ஆலயத்தின் நித்திய பூஜை குரு, சிவஸ்ரீ நாகேஸ்வரசர்மாவினால் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவுருவப்படத்திற்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
சமய குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசை ஆடிச்சுவாதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)